ADDED : அக் 03, 2025 05:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அருகே தனியார் பள்ளி மாணவரிடம், பாலியல் ரீதியாக துன்புறுத்திய வாலிபரை, போலீசார் 'போக்சோ' சட்டத்தில் கைது செய்தனர்.
கடலுார் மாவட்டம், பரங்கிப்பேட்டை அடுத்த அரியகோஷ்டி கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம்,39; இவர், 11 வயது தனியார் பள்ளி மாணவரை, பாலியல் ரீதியாக துன்புறுத்தினார். பாதிக்கப்பட்ட மாணவர், நடந்த சம்பவத்தை தனது தாயிடம் கூறினார்.
புகாரின் பேரில், பரங்கிப்பேட்டை இன்ஸ்பெக்டர் ஜெர்மின் லதா, 'போக்சோ' சட்டத்தில் நேற்று வழக்குப் பதிந்து, ஆறுமுகத்தை கைது செய்தார்.