பா.ஜ., கூட்டங்களுக்கு போலீஸ் கெடுபிடி; பொதுச்செயலாளர் பேட்டி
பா.ஜ., கூட்டங்களுக்கு போலீஸ் கெடுபிடி; பொதுச்செயலாளர் பேட்டி
ADDED : அக் 13, 2025 11:43 PM
காரைக்குடி: பா.ஜ., நடத்தும் கூட்டங்களுக்கு போலீசார் அதிகளவில் கெடுபிடி அளிக்கின்றனர் என காரைக்குடியில் அக்கட்சியின் மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது, கடந்த சில நாட்களாக முன்னாள் நிதி அமைச்சர் சிதம்பரம் நல்ல விஷயங்களை பேசி வருகிறார். மதுரையில் பா.ஜ., நடத்திய கூட்டத்திற்கு போலீசார் அதிக கெடுபிடி அளித்தனர். குறுகலான இடங்களையே ஒதுக்குகின்றனர். கூட்டத்திற்கு வருவோரை தடுப்பது, கட்சி கொடிகளை சுருட்டி எடுத்து செல்லும் விஷயங்களில் போலீசார் ஈடுபடுகின்றனர். கச்சதீவை மீட்க பிரதமர் மோடி தொடர்ந்து முயற்சித்து வருகிறார். விரைவில் கச்சத்தீவு மீட்கப்படும். கச்சத்தீவு பிரச்னைக்கு தி.மு.க., தான் காரணம்.
இருமல் மருந்து பிரச்னைக்கு தமிழக அரசு தன்னுடைய பணியை முறையாக செய்யாததே காரணம். கரூர் பிரச்னை குறித்த விசாரணையை சி.பி.ஐ.,யிடம் ஒப்படைத்ததை வரவேற்கிறேன் என்றார்.