ADDED : அக் 22, 2024 02:24 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை : சென்னை அருகே வங்கக்கடலில், வலையில் சிக்கி உயிருக்கு போராடிய கடல் ஆமையை, இந்திய கடலோர காவல் படை வீரர்கள் மீட்டு, மறுவாழ்வு அளித்தனர்.
சென்னை கடலோர பகுதியில், இந்திய கடலோர காவல்படை வீரர்கள், 'ராணி அப்பக்கா' என்ற கப்பலில் ரோந்து சென்றனர். அப்போது, கடலில் மீனவர்களால் எரியப்பட்ட வலையில், ஒரு கடல் ஆமை சிக்கி நீந்த முடியாமல், உயிருக்கு போராடியதை கண்டனர்.
கப்பலில் இருந்த உயிர்காக்கும் படகின் உதவியோடு சென்று, சிறைப்படுத்தி இருந்த வலைப்பின்னலை அறுத்து வீசி, ஆமையை மீட்டனர். அதற்கு முதலுதவி செய்து, மீண்டும் கடலில் விட்டனர்.
கடல் ஆமைகளின் இனப்பெருக்க பகுதிகளை பாதுகாக்க, மத்திய அரசு, 'ஒலிவியா' திட்டத்தை செயல்படுத்தி வரும் நிலையில், கடலோர காவல் படையினரின் செயல் பாராட்டப்படுகிறது.