ADDED : அக் 27, 2024 02:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை,:தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக மணிக்குமார் உள்ளார். இவரது வீடு, சென்னை ஐ.ஐ.டி., அருகே உள்ளது.
வீட்டிற்கு ஒரு துப்பாக்கி ஏந்திய காவலர் உட்பட இருவர், பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், சென்னையில் சமீபத்தில் நடந்த, பாதுகாப்பு மறு ஆய்வு கூட்டத்தில், வி.ஐ.பி.,க்கள் சிலருக்கான பாதுகாப்பை திரும்பப் பெற, ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மாநில மனித உரிமை ஆணையத் தலைவர் வீட்டிற்கு வழங்கப்பட்டு வந்த, துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பை நேற்று, சென்னை போலீசார் திரும்ப பெற்றதாக கூறப்படுகிறது.
துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு திரும்ப பெற ஒப்புதல் அளிக்கப்பட்டது. ஆனால் நேற்று வரை, பணியில் போலீசார் ஈடுபட்டனர் என, சென்னை காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.