ADDED : நவ 07, 2024 09:21 PM
தமிழகத்திற்கு மாதந்தோறும் வழங்க வேண்டிய காவிரி நீரை, கர்நாடக அரசு கொடுக்க வேண்டும். கர்நாடக அரசை வலியுறுத்தி, தமிழக அரசு அதை முறையாக பெற வேண்டும். அரசின் கவனம் இதுவாகத்தான் இருக்க வேண்டும்.
திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் ஓடும் ஆறுகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, துார்வாரி தேவையான இடங்களில் தடுப்பணைகள் கட்ட வேண்டும்.
அரசு பஸ்களை முறையாக பராமரிக்க வேண்டும். விபத்துக்கள் ஏற்படாத வகையில், அதில் பயணம் செய்யும் மக்களை பாதுகாக்க வேண்டும்.
நடிகர் விஜய் துவங்கியுள்ள கட்சியின் கொள்கை, கோட்பாடுகள் அவருடைய கட்சியின் வளர்ச்சிக்கானதாக இருக்க வேண்டும். மற்ற கட்சிகளை திருப்திபடுத்துவதற்காக, கொள்கை, கோட்பாடுகளை வகுக்க வேண்டிய அவசியம் இல்லை. விஜய் கட்சி ஒரு கட்சிக்கு ஏ டீமாக இருக்கிறது என்பதெல்லாம் தேவையில்லாத விமர்சனம். கட்சிக்கு எது தேவை என்பதை விஜய் தான் தீர்மானிக்க வேண்டும்.
வாசன், தலைவர், த.மா.கா.,

