தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/இணையவழி ஒப்புதல் பெற மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் உதவி மையம் திறப்பு

இணையவழி ஒப்புதல் பெற மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் உதவி மையம் திறப்பு

இணையவழி ஒப்புதல் பெற மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் உதவி மையம் திறப்பு


UPDATED : அக் 10, 2026 12:00 AM

ADDED : அக் 09, 2026 11:16 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 10, 2026 12:00 AM ADDED : அக் 09, 2026 11:16 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: இணையவழி ஒப்புதல் பெற, சென்னையில் உள்ள தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைமை அலுவலகத்தில், உதவி மையம் திறக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, வாரியம் வெளியிட்ட அறிக்கை:

சென்னை, கிண்டியில் உள்ள, தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைமை அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள, இணையவழி ஒப்புதல் மேலாண்மை மற்றும் கண்காணிப்பு முறை உதவி மையத்தை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ராஜிவ், நேற்று தொடங்கி வைத்தார்.

மாசு கட்டுப்பாடு வாரியத்தின் ஒப்புதல் மற்றும் அங்கீகாரம், நீட்டிக்கப்பட்ட உற்பத்தியாளர் பொறுப்பு பெறுவதற்கான விண்ணப்பங்களை, இணையவழியில் பூர்த்தி செய்தல், ஆவணங்களை பதிவேற்றம் செய்தல் குறித்த சந்தேகங்களுக்கான வழிகாட்டுதலை பெறவும், கால தாமதத்தை குறைத்து, நடைமுறைகளை எளிமைப் படுத்தவும், இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இணையவழி ஒப்புதலுக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும்போது ஏற்படும் தொழில்நுட்பம், நடைமுறை சிக்கல்களுக்கு தீர்வு காண, அனைத்து வேலை நாட்களிலும், காலை 10:00 முதல் மாலை 5:45 மணி வரை, 044 – -43722000 என்ற தொலைபேசி எண், helpdesk@tnpcb.gov.in என்ற ‘இ – மெயிலில்’ தொடர்பு கொள்ளலாம். அரசு விடுமுறை நாட்கள் தவிர்த்து, ஒவ்வொரு வெள்ளிக்கிழமை தோறும் தொழிற்சாலைகள், தொழில் முனைவோர், இந்த மையத்திற்கு நேரில் வந்து, சந்தேகங்களுக்கான விளக்கங்களை பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us