பொங்கல் பரிசு ரூ.3,000 'டாஸ்மாக்'கிற்கு திரும்பும்
பொங்கல் பரிசு ரூ.3,000 'டாஸ்மாக்'கிற்கு திரும்பும்
ADDED : ஜன 07, 2026 08:14 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தி.மு.க., அரசு பெரிய திட்டங்களை அறிவித்துவிட்டு, அவற்றை செயல்படுத்தாமல் மக்களை ஏமாற்றி வருகிறது. விவசாய பொருட்களுக்கு சேமித்து வைக்க கிடங்கு வசதிகள் இல்லை. ஆனால், 'டாஸ்மாக்' மதுபானங்களை இருப்பு வைத்துக்கொள்ள கிடங்குகள் அமைத்து உள்ளனர்.
தற்போது, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் பொங்கல் பரிசாக தலா, 3,000 ரூபாய் வழங்கப்படும் என அறிவித்துள்ளனர்.
மக்களின் வரிப்பணத்தில் இருந்து 3,000த்தை கொடுத்து விட்டு, அதை மீண்டும் 'டாஸ்மாக்' கடை வாயிலாக திரும்பப் பெறுவதே இந்த திட்டத்தின் நோக்கம்.
இப்படி, ஏழை - எளிய மக்களை வஞ்சித்து, பொதுமக்களை ஓட்டு போடும் மிஷின்களாக தி.மு.க., பயன்படுத்தி வருகிறது ரொம்ப காலத்துக்கு இப்படி ஏமாற்ற முடியாது.
- சவுமியா, தலைவர், பசுமை தாயகம்

