ADDED : ஜன 07, 2026 08:18 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேர்தல் தோல்வி பயத்தில், பொங்கல் பரிசுத்தொகை வழங்குவதாக கூறுவது நகைப்புக்குரியது. 'நரம்பு இல்லாத நாக்கு எதை வேண்டுமானாலும் பேசும்' என்ற கூற்று, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு பொருந்தும். ஒரு மாதம் ஈ.வெ.ரா.,வை எதிர்த்தும், மறு மாதம் வரவேற்றும் பேசுவார். பாரதியாரை கூட வரவேற்றும், எதிர்த்தும் சீமான் பேசுவார்.
தமிழகத்தில் கூட்டணி ஆட்சிக்கு அவசியம் இல்லை. தனிப்பெரும்பான்மையுடன் தி.மு.க., ஆட்சி அமைக்கும். பெரும்பான்மை கிடைக்காவிட்டால் தான், கூட்டணி ஆட்சி பற்றி பேச முடியும். தி.மு.க.,வுக்கு தனி பெரும்பான்மை கிடைக்காது என்ற கணிப்புக்கு காங்கிரஸ் வந்து விட்டதா?
கருத்து கணிப்பில், முதல்வர் வேட்பாளர் பட்டியலில் விஜய் இரண்டாவது இடத்தில் இருப்பதாக கூறுவதை நம்ப முடியவில்லை. அது, கருத்து கணிப்பு அல்ல; கருத்து திணிப்பு.
- சண்முகம் மாநில செயலர், மா.கம்யூ.,

