sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

அசுர வளர்ச்சியில் போரூர்

/

அசுர வளர்ச்சியில் போரூர்

அசுர வளர்ச்சியில் போரூர்

அசுர வளர்ச்சியில் போரூர்


UPDATED : மார் 07, 2025 09:38 PM

ADDED : மார் 07, 2025 09:10 PM

Google News

UPDATED : மார் 07, 2025 09:38 PM ADDED : மார் 07, 2025 09:10 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடந்த 2000ம் ஆண்டு காலகட்டத்தில் தான் மத்திய கைலாஷ் அருகே 8 ஏக்கர் பரப்பளவில் டைடல் பார்க் என்பது ஐடி துறையின் வளர்ச்சிக்கு உருவாக்கப்பட்டது. அப்போது இந்தியாவில் இது மிகப்பெரிய பேசும்பொருளாக இருந்தது.

ஐடி நிறுவனங்கள் எண்ணிக்கை அதிகரித்தது. இதனால், ஓஎம்ஆர் பகுதியே ஐடி காரிடர் என அறிவிக்கப்பட்டது.

ஐடி நிறுவனங்களுக்கு தேவையான தொழில்நுட்ப வசதி, தடையில்லாத மின்சாரம், பிரீமியம் FSI, போக்குவரத்து வசதிகள், சாலை கட்டமைப்பு போன்றவை வழங்கப்பட்டதால் அப்பகுதியே பெரும் வளர்ச்சி அடைந்தது. குறிப்பாக பெரிய காலி நிலங்கள்

இருந்ததால், ஐடி பூங்கா அமைய வசதியாக இருந்தது.

ஓஎம்ஆர் ஐடி காரிடாரில் உள்ள சிக்கல்


மத்திய கைலாஷ் முதல் சிறுசேரி வரையிலான 30 கிமீ பகுதியே இதற்கு ஏற்ற இடமாக இருந்ததால், சென்னையின் மற்ற பகுதிகளை விட இந்த பகுதியே பெரும் வளர்ச்சி அடைந்தது.

சுமார் 3 லட்சம் ஊழியர்கள் இப்பகுதியில் பணிபுரிகின்றனர் என்கிறது ஒரு புள்ளி விவரம்.

ஆனால் இந்த ஓஎம்ஆர் ஐடி காரிடரில் ஒரு சின்ன சிக்கல் உள்ளது. இப்பகுதி வளர்ச்சி அடையும் போது 4 பக்கமும் வளர்ச்சி அடையாமல் ஒரே நேர்கோட்டில் வளர்ச்சி கண்டுள்ளது.

கிழக்கு பகுதியில் கடற்கரை உள்ளது. மேற்கு பகுதியில் வேளர்ச்சேரி, கிண்டி, அண்ணா சாலை போன்ற குடியிருப்பு பகுதிகள் உள்ளன. எனவே ஐடி காரிடரை இதற்கு மேல் விரிவுபடுத்த முடியாத சூழல் உருவாகிவிட்டது.

சென்னையில் ஒரு பகுதியில் ஐடி காரிடர் அமைக்கவேண்டும் என்றால், எல்லா பக்கமும் வளர்ச்சி அடைய வேண்டும், எல்லா வசதிகளும் அந்த ஊழியர்களுக்கு கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் பல்வேறு கட்ட ஆலோசனை நடத்தப்பட்டது.

அனைத்து வசதிகளும் உள்ள இடம் போரூர்


மவுண்ட்- பூந்தமல்லி சாலையில் உள்ள நந்தம்பாக்கம் மற்றும் போரூர் பகுதிகள் அதற்கு ஏற்ற இடமாக இருக்கும் என்ற நம்பிக்கை கிடைத்தது.

ஒரு இடத்தில் தொழிற்சாலை அமைவதற்கும், ஐடி நிறுவனம் வருவதற்கும் பல வித்தியாசங்கள் உள்ளன.

உதாரணத்துக்கு தொழிற்சாலைக்கு செல்வோர் 9-6 மணி ஷிப்டில் பணிபுரிந்து வீட்டுக்கு சென்று விடலாம். ஆனால் ஐடி ஊழியர்கள் பல்வேறு ஷிப்ட்களில் வேலை செய்கின்றனர்.

இதனால் நிறுவனங்கள் அருகே வீடு இருந்தால் எளிமையாக சென்று வரலாம் என்ற பாதுகாப்பு அம்சத்துடன் ஊழியர்கள் நினைப்பார்கள். பல லட்சங்களில் இவர்களின் சம்பளம் இருப்பதால்

இதற்காக முதலீடு செய்யவும் முடியும்.

ஃபின்டெக் சிட்டி திட்டம்


தற்போது போரூர்-நந்தம்பாக்கம் பகுதியில் பல ஐடி பார்க்குகள் வர உள்ளதால், மிகப்பெரிய வளர்ச்சியை அடைய உள்ளது. இந்த பகுதியில் வரவுள்ள Fintech City. 111.4 ஏக்கர் பரப்பளவில் 12,000 கோடி செலவில் உருவாக திட்டமிடப்பட்டுள்ளது. 1.5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என கணக்கிட்டுள்ளனர்.இதற்கு முக்கிய பங்கு வகிக்கப்போவது FSI.

Image 1389356


உயரும் FSI. அப்படி என்றால் என்ன?


குறிப்பிட்ட இடத்தில் எவ்வளவு பரப்பரளவில் கட்டுமானம் கட்ட முடியும் என்பதை குறிப்பது தான் FSI.

உதாரணத்துக்கு 1000 சதுர அடி பரப்பளவு பகுதியில் 3 அடுக்கு மாடிகள் இருக்கும். மொத்தம் 3000 சதுர அடி. 3000/1000 அதாவது 3 என்பது தான் அந்த இடத்தினுடைய FSI.

சென்னையில் அதிகபட்சமாக 3.25 FSI அளவுக்கு தான் அனுமதி உள்ளது. ஓஎம்ஆர் பகுதியின் பிரீமியம் FSI 3.62. குடியிருப்பு பகுதிகளில் இதை விட குறைவு தான்.

தற்போது பின்டெக் சிட்டி, மெட்ரோ ரயில், ரிங் ரோடு பகுதிகளுக்கான FSI அதிகரிக்க அரசு திட்டமிட்டுள்ளது. எனவே அதிகபட்சமாக 6.5 வரை FSI அதிகரிக்கப்படும். அதற்கான ஆலோசனைகள் நடந்து வருகிறது.

1000 சதுர அடி பரப்பளவில் 5 மாடி கட்டடங்கள் இருந்த நிலையில், இந்த FSI அதிகரிப்பால் இனி 10 மாடி கட்டடம் கட்ட முடியும். 1 லட்சம் பேர் பணிபுரிந்த இடத்தில், 2 லட்சம் பேர் பணிபுரிய முடியும். பணப்புழக்கம் அதிகரிக்கும், வேலைவாய்ப்பு கூடும். நந்தம்பாக்கம் போரூர் பகுதியில் உள்ள DLF, உள்ளிட்ட ஐடி நிறுவனங்கள் வளர்ச்சி அடையும். இங்கு மட்டும் தற்போது சுமார் 50 ஆயிரம் ஐடி ஊழியர்கள் பணிபுரிகின்றனர்.

புதிய அடுக்குமாடி. , IBM, CTS, TCS மற்றும் பல முண்ணனி நிறுவனங்களை உள்ளடக்கிய DLF IT Park, SP Infocity, L&T Infotech, RMZ Millenia போன்ற ஐடி பூங்காக்கள் உள்ள போரூரில் மேலும் சில ஐ டி பூங்காக்கள் அமைய உள்ளதாலும் போரூரை நோக்கி பல Startup முதல் பன்நாட்டு நிறுவனங்கள் வருகை உயர்வதால் போரூரின் சமூக உள்கட்டமைப்பு பன்மடங்கு வேகத்தில் வளர்ச்சி அடைந்து வருகிறது

போக்குவரத்து வசதிகள்


மவுண்ட் - பூந்தமல்லி SH 55 சாலை வழியாக குன்றத்தூர், செயின்ட் தாமஸ் மவுண்ட் பகுதிகளுக்கு எளிதாக செல்லலாம்.

போரூரில் இருந்து வடபழனி, சாலிகிராமம், கோடம்பாக்கம், மதுரவாயல், தாம்பரம், ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு பயணிக்கலாம்.

சென்னை- பெங்களூரு சாலையை சட்டென பிடிக்கலாம்.

போரூரில் மெட்ரோ வந்துவிட்டால், கோயம்பேடு, அண்ணா நகர் பகுதிகளுக்கு சீக்கிரம் பயணிக்கலாம். இதனால் அப்பகுதியில் ரியல் எஸ்டேட் வளர்ச்சி அடைந்து வருகிறது.

சென்னை ஏர்போர்ட் மற்றும் பரந்தூரில் அமையவுள்ள விமான நிலையத்துக்கும் செல்ல சாலை வசதி உள்ளது.

குத்தம்பாக்கம் புறநகர் பேருந்து நிலையமும் இந்த பகுதியில் தான் அமைய உள்ளது.

உயர்தர கல்வி நிறுவனங்கள்


PSBB மில்லினியம் பள்ளி, வேலம்மாள் வித்யாலயா, செயின்ட் ஜான்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, பொன் வித்யாஷ்ரம், ஸ்ரீ கிரிஷ் சர்வதேச பள்ளி, நாராயண ஒலிம்பியாட் பள்ளி கிரேஸ் மெட்ரிகுலேஷன் பள்ளிகளும் அருகே உள்ளன.

ஸ்ரீ ராமச்சந்திரா உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், மாதா பொறியியல் கல்லூரி, செயின்ட் ஜோசப் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, மீனாட்சி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஆல்பா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, லயோலா கல்லூரி (சாட்டிலைட் வளாகம்), வேல் டெக் பிசினஸ் ஸ்கூல், மெட்ராஸ் கிறிஸ்தவக் கல்லூரி (சாட்டிலைட் வளாகம்) உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கு எளிதாக பயணிக்கலாம்.

தண்ணீருக்கு பஞ்சமில்லை


முக்கியமாக பார்க்க வேண்டியது தண்ணீர் வசதி. வருடம் முழுவதும் வற்றாத நீர் நிலையாக போரூர் ஏரி இருப்பதால் அங்கு தண்ணீர் பிரச்சனையே வராது.

இப்படி எல்லா வசதிகளும் அடங்கிய போரூரில் தான் ரியல் எஸ்டேட் வளர்ச்சி அதிகம் இருக்க போகிறது.








      Dinamalar
      Follow us