தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/போத்தனுார்–பரூனி சிறப்பு ரயில் நீட்டிப்பு

போத்தனுார்–பரூனி சிறப்பு ரயில் நீட்டிப்பு

போத்தனுார்–பரூனி சிறப்பு ரயில் நீட்டிப்பு


UPDATED : அக் 27, 2026 08:48 PM

ADDED : அக் 27, 2026 08:44 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 27, 2026 08:48 PM ADDED : அக் 27, 2026 08:44 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்: போத்தனுார் – பரூனி சிறப்பு வார ரயில், நவ., 29 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

போத்தனுார் – பரூனி சிறப்பு வார ரயில் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை, 6:15 மணிக்கு போத்தனுாரில் கிளம்பி, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை வழியே செவ்வாய்க்கிழமைல் மதியம், 1:30 மணிக்கு பீகாரில் உள்ள பரூனி சென்றடையும். சேலம் ஜங்ஷனுக்கு ஞாயிற்றுக்கிழமை காலை, 9:00 மணிக்கு வந்து செல்லும். இந்த ரயில் நவ., 29 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மறு மார்க்க ரயிலான பரூனி – போத்தனுார் சிறப்பு வார ரயில் புதன்கிழமைகளில் காலை, 10:30 மணிக்கு கிளம்பி, சேலம் வழியே வெள்ளிக்கிழமை மாலை, 6:30 மணிக்கு போத்தனுார் வந்து சேரும். இந்த ரயில் சேலம் ஜங்ஷனுக்கு வெள்ளிக்கிழமை மதியம், 2:00 மணிக்கு வந்து செல்லும். இந்த ரயில் டிச., 2 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு இன்று காலை, 8:00 மணிக்கு தொடங்குகிறது.

இத்தகவலை சேலம் ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us