ADDED : அக் 24, 2025 01:13 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கேரளாவில் 64,006 குடும்பங்கள் வறுமையின் பிடியிலிருந்து மீட்கப்பட்டு, இருப்பிடம், வாழ்வாதாரம், மருத்துவ வசதிகள் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளன. இதன் வாயிலாக, இந்தியாவில் கொடிய வறுமையை ஒழித்த முதல் மாநிலம் என்ற பெருமையை கேரளா பெறுகிறது.
வறுமைக்கான காரணங்களை கண்டறிய, கேரளாவில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பே இதற்கு காரணம். தமிழகத்திலும் வறுமை தலைவிரித்தாடுகிறது. ஆனால், தமிழகத்தில் வறுமையில் வாடும் குடும்பங்கள் குறித்த தரவுகள் இல்லை.
இவை அனைத்தையும் ஒன்றாக கண்டறிந்து தீர்வு காண, சமூக, பொருளாதார ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என, பா.ம.க., தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அதை செய்தால், தங்கள் ஆட்சியில் நிகழ்த்தப்பட்ட, சமூக அநீதிகள் அனைத்தும் அம்பல மாகிவிடும் என, தி.மு.க., அரசு அஞ்சுகிறது.
- அன்புமணி
தலைவர், பா.ம.க.,

