sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 30, 2026 ,பங்குனி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

திருச்சி வந்தார் பிரதமர் மோடி: ரூ.5,650 கோடி திட்டங்கள் துவக்கி வைக்கிறார்

/

திருச்சி வந்தார் பிரதமர் மோடி: ரூ.5,650 கோடி திட்டங்கள் துவக்கி வைக்கிறார்

திருச்சி வந்தார் பிரதமர் மோடி: ரூ.5,650 கோடி திட்டங்கள் துவக்கி வைக்கிறார்

திருச்சி வந்தார் பிரதமர் மோடி: ரூ.5,650 கோடி திட்டங்கள் துவக்கி வைக்கிறார்

16


UPDATED : மார் 11, 2026 04:39 PM

ADDED : மார் 11, 2026 05:13 AM

Google News

16

UPDATED : மார் 11, 2026 04:39 PM ADDED : மார் 11, 2026 05:13 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: திருச்சியில் இன்று, 5,650 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களை, பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார்.

கேரளா மாநிலத்தில் இருந்து, பிரதமர் மோடி, இன்று மாலை 4 மணியளவில், திருச்சி வந்தார். அங்கு நடக்கும் அரசு நிகழ்ச்சியில், 5,650 கோடி ரூபாய் மதிப்பிலான, பல்வேறு திட்டங்களை துவக்கி வைக்கிறார். புதிய திட்டங்களுக்கு, அடிக்கல் நாட்ட உள்ளார்.

நீலகிரி, ஈரோடு மாவட்டங்களில், 3,680 கோடி ரூபாய் முதலீட்டில், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம், குழாய் வழித்தடத்தில் இயற்கை எரிவாயு வினியோகம் செய்யும் திட்டத்திற்கு, பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்.

சென்னை அடுத்த மணலியில், இந்தியன் ஆயில் நிறுவனத்தின், 1,490 கோடி ரூபாய் முதலீட்டில் அமைக்கப்பட்டுள்ள, மசகு எண்ணெய் கலவை ஆலையை, பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

பிரதமர் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ், தமிழகத்தில், 370 கி.மீ., நீளமுள்ள, 89 கிராமப்புற சாலைகளை திறந்து வைக்கிறார்.

தேசிய நெடுஞ்சாலை 81ல், கங்கைகொண்ட சோழபுரம் அருகே, பசுமை புறவழிச்சாலை அமைக்க, அடிக்கல் நாட்டுகிறார்.

இரண்டு அம்ரித் பாரத் விரைவு ரயில்கள், இரு விரைவு ரயில்கள் மற்றும் ஒரு பயணியர் ரயில் சேவையையும், மோடி கொடியசைத்து துவக்கி வைக்கிறார்.

பின், மாலை, 6:30 மணிக்கு திருச்சியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் நடக்கும் பொதுக்கூட்டத்தில், பிரதமர் பேசுகிறார்.

இதுகுறித்து, பிரதமர் மோடி வெளியிட்டுள்ள 'எக்ஸ்' பதிவு:

திருச்சியில் நடக்கும் தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்தில், கூட்டணி கட்சி தலைவர்களுடன் பங்கேற்கிறேன். தமிழகம் முழுதும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அதிகரித்து வரும் மக்கள் ஆதரவை பார்த்து, தி.மு.க., பதற்றம் அடைந்துள்ளது.

தி.மு.க.,வின் தவறான நிர்வாகமும், நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளும் குறித்து, தமிழக மக்கள் உணர்ந்து விட்டனர். அதனால் தான் நம்பிக்கையும், முன்னேற்றமும் உடைய தேசிய ஜனநாயக கூட்டணி திட்டங்களுடன் மக்கள் அதிகமாக இணைந்து வருகின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us