உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : அக் 20, 2026 08:58 PM
அ நிறம் | அளவு
திருநெல்வேலி: திருநெல்வேலி மத்திய சிறை வார்டன்கள் மணிகண்டன், 53, காசி, 54, ஆகிய இருவர், கைதிகளால் தாக்கப்பட்டனர்.
திருநெல்வேலி மத்திய சிறையில், கைதிகளுக்கு இடையே ஜாதி ரீதியான மோதல்களைத் தடுக்கும் வகையில், ஜாதி அடிப்படையில் தனித்தனி ‘பிளாக்’குகளில் அடைக்கும் நடைமுறை உள்ளது.
ஐந்தாவது பிளாக்கில் நேற்று மதியம், விசாரணை கைதிகளுக்கு உணவு வழங்கியபோது, குழம்பு குறைவாக ஊற்றப்பட்டதாக கூறி தகராறு ஏற்பட்டு, மோதலாக மாறியது.
கைதிகளை சமாதானப்படுத்தச் சென்ற சிறை வார்டன்கள் மணிகண்டன், காசி ஆகிய இருவரும் தாக்கப்பட்டு, திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பெருமாள்புரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
