தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/சிறை கைதிகள் தப்பினால் சுட்டுப்பிடிக்க உத்தரவு

சிறை கைதிகள் தப்பினால் சுட்டுப்பிடிக்க உத்தரவு

சிறை கைதிகள் தப்பினால் சுட்டுப்பிடிக்க உத்தரவு


ADDED : அக் 28, 2026 06:02 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 28, 2026 06:02 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: சிறை கைதிகள் தப்பினால், அவர்களை துப்பாக்கியால் சுட்டுப்பிடிக்க, சிறைத் துறை டி.ஜி.பி., சந்தீப்ராய் ரத்தோட் உத்தரவிட்டு உள்ளார்.

இதுகுறித்து, சிறைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:

தேனி மாவட்டம், தேக்கம்பட்டியில் உள்ள மாவட்ட சிறையில் இருந்து, 17 கைதிகள் தப்பினர். இவர்களை, ‘ட்ரோன் கேமரா’ வாயிலாக கண்காணித்து, நேற்று (அக்.,27), 13 பேரை பிடித்தனர்; இன்று (அக்.,28) இரண்டு கைதிகள் பிடிபட்டனர். மற்ற இரண்டு கைதிகளை தேடும் பணி நடந்து வருகிறது. அவர்களும் விரைவில் சிக்குவர்.

சில தினங்களுக்கு முன், புழல் மத்திய சிறையில் இருந்து தப்பிய கைதிகள் சுதீப் போகாத்தி, சுரேஷ் ஆகியோரும் பிடிபட்டனர். இது போன்ற சம்பவங்களை தடுக்க, கடும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

இனி கைதிகள் தப்பிக்கும் சம்பவம் நடந்தால், நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து, கைதிகளை துப்பாக்கியால் சுட்டுப் பிடிக்கலாம் என, சிறைத்துறை டி.ஜி.பி., சந்தீப்ராய் ரத்தோட் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், தமிழகத்தில் உள்ள, 125 சிறைகளிலும் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆய்வு நடக்கிறது. சிறை வளாகத்தில் கயிறு, ஒயர் போன்ற பொருட்கள் கிடக்கின்றனவா, சிறை அருகே கட்டடங்கள், மின் கம்பங்கள் உள்ளனவா என்பது குறித்தும் ஆய்வு செய்யப் படுகிறது. எல்லா சிறைகளிலும் சோதனைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us