தமிழகத்தில் இந்தாண்டு ரேபிஸ் தாக்குதலுக்கு 28 பேர் பலி: நாய்க்கடியால் 5.25 லட்சம் பேர் பாதிப்பு
தமிழகத்தில் இந்தாண்டு ரேபிஸ் தாக்குதலுக்கு 28 பேர் பலி: நாய்க்கடியால் 5.25 லட்சம் பேர் பாதிப்பு
ADDED : நவ 18, 2025 09:37 PM

சென்னை: தமிழகத்தில் இந்தாண்டு நாய்க்கடியால் 28 பேர் உயிரிழந்து உள்ளனர். 5.25 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்று சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை;
2021ம் ஆண்டில் 3.19 லட்சம் பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டு, 19 பேர் ரேபிசால் இறந்தனர். 2022ல் 3.64 லட்சம் பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டனர். அவர்களில் 28 பேர் ரேபிஸ் தாக்கி உயிரிழந்தனர்.
2023ல் 4.41 லட்சம் பேர் பாதிக்கப்பட, 18 பேர் ரேபிஸ் தொற்றுக்கு ஆளாகி பலியாகினர். 2024ம் ஆண்டில் 4.8 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு, பலி எண்ணிக்கை 48 ஆக இருந்தது.
2025ம் ஆண்டில் இதுவரை நாய்க்கடியால் மொத்தம் 5.25 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். ரேபிஸ் தாக்குதலுக்கு ஆளாகி 28 பேர் பலியாகி இருக்கின்றனர்.
இவ்வாறு சுகாதாரத்துறை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

