ADDED : ஆக 19, 2025 06:36 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீபெரும்புதுார்: ஸ்ரீபெரும்புதுார் அருகே, இருங்காட்டுக்கோட்டை மற்றும் மாம்பாக்கம் சிப்காட் பகுதிகளில், 'இன்டர்ஆர்க் பில்டிங் சொல்யூஷன்ஸ்' என்ற, கட்டுமான இரும்பு பில்லர் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை இயங்கி வருகிறது.
இந்த தொழிற்சாலையில் வரி ஏய்ப்பு செய்திருப்பதாக கிடைத்த புகார் அடிப்படையில், நேற்று காலை, எட்டு கார்களில் வந்த வருமான வரித் துறை அதிகாரிகள், இருங்காட்டுக்கோட்டை மற்றும் மாம்பாக்கத்தில் உள்ள தொழிற்சாலை அலுவலகங்களில் சோதனையில் ஈடுபட்டனர்; நேற்று மாலை வரை சோதனை தொடர்ந்தது.