ADDED : மார் 15, 2024 01:17 AM

சென்னை:விழுப்புரம் மாவட்டம் உளுந்துார்பேட்டையில், எக்ஸ்பிரஸ் ரயில்கள் நின்று செல்ல வலியுறுத்தி, தமிழக பா.ஜ., செயலர் அஸ்வத்தாமன், 1,000 பேரிடம் கையெழுத்து வாங்கிய மனுவை, ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவிடம் வழங்கி இருந்தார்.
அதன் நினைவூட்டல் கடிதத்தை, சென்னைக்கு நேற்று வந்திருந்த அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவை சந்தித்து, அஸ்வத்தாமன் வழங்கினார். அந்த மனு மீது, உடனடி நடவடிக்கை எடுக்குமாறு ரயில்வே அதிகாரிகளுக்கு, அஷ்வினி வைஷ்ணவ் உத்தரவிட்டுள்ளார்.
இதுதவிர, மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில், திருச்செந்துார் எக்ஸ்பிரஸ் ரயில்; கடலுார் மாவட்டம் பண்ருட்டியில் எக்ஸ்பிரஸ் ரயில்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கக் கோரிய மனுவை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவிடம், அஸ்வத்தாமன் வழங்கியுள்ளார்.
அவற்றின் மேல் நடவடிக்கை எடுப்பதாக, அமைச்சர் உறுதி அளித்துள்ளார்.

