தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ரயில்வே யார்டில் பராமரிப்பு இரண்டு ரயில்கள் கால தாமதம்

ரயில்வே யார்டில் பராமரிப்பு இரண்டு ரயில்கள் கால தாமதம்

ரயில்வே யார்டில் பராமரிப்பு இரண்டு ரயில்கள் கால தாமதம்


ADDED : நவ 10, 2026 11:08 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 10, 2026 11:08 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்: ஈரோடு ரயில்வே யார்டில், இணைப்பு புள்ளிகள் புதுப்பித்தல் மற்றும் பராமரிப்பு பணி காரணமாக, இந்த மார்க்கத்தில் இயக்கப்படும் இரண்டு ரயில்கள் கால தாமதமாக செல்லும்.

இதுகுறித்து, சேலம் ரயில்வே கோட்டம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கை:

ஈரோடு ரயில்வே யார்டில் பராமரிப்பு பணி காரணமாக, நாளை (நவ.,11) ஒருநாள் மட்டும் எர்ணகுளம் – டாடா நகர் எக்ஸ்பிரஸ் ரயில் பயண வழியில், ஏதாவது ஒரு பொருத்தமான இடத்தில், 1 மணி நேரம் தாமதம் செய்து, பின் இயக்கப்படும்.

இதே போல் ஆலப்புழா – தன்பாத் எக்ஸ்பிரஸ் ரயில், நாளை ஒரு நாள் மட்டும், பொருத்தமான இடத்தில், 35 நிமிடங்கள் கால தாமதம் செய்து இயக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us