உள்ளடக்கத்திற்கு செல்ல

போதையில் தாயை சரமாரியாக கத்தியால் குத்திய மகன் கைது
போதையில் தாயை சரமாரியாக கத்தியால் குத்திய மகன் கைது
UPDATED : நவ 10, 2026 11:08 AM
ADDED : நவ 10, 2026 11:05 AM

அ நிறம் | அளவு
அரியலுார்: அரியலுார் மாவட்டம், பொற்பதிந்தநல்லுார் கிராமத்தை சேர்ந்தவர் மணி மகன் சேகர், 49. இவர், குடிபோதையில் அடிக்கடி பெற்றோரிடம் தகராறில் ஈடுபடுவது வழக்கம். தீபாவளி அன்று வழக்கம் போல் மதுபோதையில் வந்த சேகர், தாய் ஆண்டாள், 68, என்பவரிடம் தகராறு செய்தார்.
அப்போது, ஆத்திரமடைந்த சேகர் திடீரென கையில் வைத்திருந்த கத்தியால் தாயை கை மற்றும் காலில் குத்தினார். ஆண்டாளின் அலறல் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்ததைக் கண்டு சேகர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
அக்கம் பக்கத்தினர் ஆண்டாளை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து, தா.பழூர் போலீசார் வழக்கு பதிந்து, சேகரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
