ரயில்வேயில் 1,265 பணியிடங்கள் விண்ணப்பங்கள் வரவேற்பு
ரயில்வேயில் 1,265 பணியிடங்கள் விண்ணப்பங்கள் வரவேற்பு
UPDATED : அக் 28, 2026 06:02 PM
ADDED : அக் 28, 2026 05:59 PM
சென்னை: ‘ரயில்வேயில், நாடு முழுதும், 1,265 நிலைய அதிகாரிகள் பணியிடங்களை நிரப்ப, அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இது குறித்து, ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:
ரயில்வே நிர்வாகம், தொழில்நுட்பப் பிரிவு உட்பட பல்வேறு பிரிவுகளில், காலியாக உள்ள பணியிடங்கள் படிப்படியாக நிரப்பப்பட்டு வருகின்றன. அந்த வகையில், நாடு முழுதும், 1,265 ‘ஸ்டேஷன் மாஸ்டர்’ பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஏதேனும் ஒரு துறையில், பட்டம் பெற்றவர்கள், இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
நாடு முழுதும் உள்ள ஆர்.ஆர்.பி., எனப்படும் ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியங்கள் வாயிலாக, மொத்தம் 1,265 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் அதிகபட்சமாக, மும்பை ஆர்.ஆர்.பி., – 177 இடங்கள்; ஜம்மு, ஸ்ரீநகர் – 122; சென்னை – 119 இடங்கள் இடம் பெற்றுள்ளன. ‘ஆன்லைன்’ விண்ணப்பப் பதிவு, நேற்று முன்தினம் தொடங்கியுள்ளது. தகுதியுள்ள பட்டதாரிகள், நவ., 25க்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும், விபரங்களை ஆர்.ஆர்.பி., இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
