ADDED : ஜூலை 11, 2026 06:15 AM

சென்னை: 'தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில், இன்று வறண்ட வானிலை நிலவும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன் அறிக்கை: தமிழகத்தில் நேற்று, நீலகிரி மாவட்டம் குன்னுாரில், 6 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. தமிழகத்தில் நேற்று இயல்பான வெப்ப நிலையை விட, 3 டிகிரி செல்ஷியஸ் வரை உயர்ந்திருந்தது.
அதிகபட்சமாக மதுரையில் 41.4 டிகிரி செல்ஷியஸ் அதாவது, 106.52 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது.
இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன், மிதமான மழை பெய்யக்கூடும்.
தமிழகத்தில் ஓரிரு இடங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தமிழகத்தின் மற்ற இடங்களில் வறண்ட வானிலையே நிலவும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில், இடி, மின்னலுடன் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
