ADDED : டிச 01, 2024 06:49 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விளைநிலங்களை பார்வையிட்ட எதிர்க்கட்சி தலைவர் இ.பி.எஸ்., விவசாயிகளின் குறைகளை கேட்டறிந்தார்.
பெஞ்சல் புயல் பாதிப்பு காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் மழை கொட்டி தீர்த்துள்ளது. மயிலம் பகுதியில் 51 செ.மீ., மழை பதிவாகியது.
இந்நிலையில், விக்கிரவாண்டி அருகே பாதிராப்புலியூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உள்ள விளைநிலங்களை எதிர்க்கட்சி தலைவர் இ.பி.எஸ்., நேரில் பார்வையிட்டு, விவசாயிகளின் குறைகளை கேட்டறிந்தார்.
தொடர்ந்து, அப்பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதிமுக சார்பில் நிவாரண உதவிகளையும் பழனிசாமி வழங்கினார்.

