ADDED : நவ 20, 2025 02:56 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மூணாறு: இடுக்கி மாவட்டத்திற்கு நேற்று பலத்த மழைக்கான 'எல்லோ அலர்ட்' முன்னெச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்தது. அந்த முன்னெச்சரிக்கை மழை இன்றி பொய்த்த நிலையில், பல பகுதிகளில் வெயில் சுட்டெரித்தது.
மூணாறில் நேற்று காலநிலை வெகுவாக மாறியது. காலையில் சற்று குளிரும், மதியம் வரை வெயிலுமாக காணப்பட்டது. அதன்பிறகு மாலை வரை வெயில் இன்றி மேகங்கள் சூழ்ந்தது. நேற்று முன்தினம் நள்ளிரவு வரை சற்று மழை பெய்த நிலையில் நேற்று காலை பல பகுதிகளில் மேகங்கள் சூழ்ந்து ரம்மியமாக காட்சியளித்தது. குறிப்பாக மூணாறு அருகே லாக்காடு எஸ்டேட் பகுதியில் மலைகள், தேயிலை தோட்டங்கள் ஆகியவற்றின் மீது தவழ்ந்த மேகங்கள் காண்போரை வசிகரித்தது.

