ADDED : மார் 01, 2024 07:37 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்போரூர் : நடிகர் ரஜினிகாந்த் நாவலுார் அருகே தான் வாங்கிய நிலத்திற்கு பத்திர பதிவு செய்ய, திருப்போரூர் சார் --பதிவாளர் அலுவலகத்திற்கு நேற்று வந்தார்.
இதையொட்டி, பதிவுத்துறை உயர் அதிகாரிகள், சார் - பதிவாளர் மற்றும் ஊழியர்கள், காலை 8:00 மணிக்கு அலுவலகம் வந்தனர். காலை 9:45 மணிக்கு, தனது பாதுகாவலர்களுடன் வந்த ரஜினிகாந்த்தை, பத்திர பதிவுத்துறை அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். பத்திரப்பதிவு செய்ய வந்த மற்ற யாரையும், அலுவலகத்துக்கு உள்ளே போலீசார் அனுமதிக்கவில்லை.
திருப்போரூர் ஒன்றியத்தில் அடங்கிய நாவலுார், தாழம்பூர் பகுதியில், 12 ஏக்கர் இடம் வாங்கியுள்ளதாகவும், நேற்று இடத்தை சார்ந்து, ஆறு ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டதாகவும், அதில் குறிப்பிட்ட இடத்தில் மருத்துவமனை கட்டப்பட உள்ளதாகவும், கூறப்படுகிறது.

