தமிழக கோயில்களில் ராமர் வழிபாடு பூஜை செய்ய அனுமதிக்க வேண்டும்: சடகோப ராமானுஜ ஜீயர் கோரிக்கை
தமிழக கோயில்களில் ராமர் வழிபாடு பூஜை செய்ய அனுமதிக்க வேண்டும்: சடகோப ராமானுஜ ஜீயர் கோரிக்கை
ADDED : ஜன 22, 2024 06:28 AM
ஸ்ரீவில்லிபுத்தூர் : ''அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிேஷகத்தை முன்னிட்டு கோயில்களில் பக்தர்கள் சிறப்பு பூஜை செய்து வழிபட தமிழக அரசு அனுமதிக்க வேண்டும்,'' என, முதல்வர் ஸ்டாலினுக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் சடகோப ராமானுஜர் ஜீயர் சுவாமிகள் கோரிக்கை விடுத்துள்ளார்.
அயோத்தியில் இன்று நடக்கும் கும்பாபிேஷகத்தில் பங்கேற்க சென்றுள்ள ஜீயர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியுள்ளதாவது:
தற்போது அயோத்தியில் எங்கு பார்த்தாலும் கல்யாண கோலாகலமாக உள்ளது. ராமர் சிலை பிரதிஷ்டை செய்ய அயோத்தி மக்கள் ஆடிப்பாடி மகிழ்கின்றனர். பல்வேறு நாடுகளிலிருந்து அயோத்தியில் மக்கள் வந்துள்ளனர்.
விஷ்வ ஹிந்து பரிஷத் ஏற்பாட்டின் பேரில் சாதுக்கள், சன்னியாசிகள், ஆதீனங்கள், ஜீயர் சுவாமிகள், மடாதிபதிகள் இங்கு வந்துள்ளோம். ராமர் கோயில் 550 ஆண்டுகளுக்கு பிறகு நம் கையில் வந்துள்ளது. இது ராமரின் மகிமையே. தனக்குரிய இடத்தை ராமர் தானே தேர்ந்தெடுத்துக் கொண்டார். நம்மை ராமன் கருவியாக பயன்படுத்திக் கொண்டுள்ளார்.
தமிழக கோயில்களில் ராமர் பூஜை செய்ய மறுப்பு தெரிவித்துள்ளதாக கேள்விப்பட்டோம். இதற்காக மிகவும் வருந்துகிறோம். முதல்வர் ஸ்டாலின் கண்டிப்பாக ரத்து செய்து கோயில்களில் அனைவரும் ஒன்றாக கூடியிருந்து ராம நாம ஜெபத்தை செய்து வழிபட அனுமதிக்க வேண்டும். முதல்வர் இதனை கண்டிப்பாக செய்வார் என நம்புகிறோம்.
இப்போது நடக்கும் ஆட்சி சமத்துவ ஆட்சி என சொல்கின்றனர். எனவே யாருக்கும் எந்தவித கருத்து வேறுபாடு இல்லாமல் அனைவரும் ஒன்றாக இருப்பதற்கும், கோயில்களில் மக்கள் விருப்பப்படி பூஜைகள் செய்வதற்கும் முதல்வர் நடவடிக்கை எடுப்பார் என்றார்.