ADDED : மார் 22, 2024 07:48 PM

தன்னைப் பற்றி பிறர் நல்லவிதமாக பேச வேண்டும் என மனிதர்கள் நினைக்கிறார்கள். ஆனால் சிலர் மட்டுமே அதன்படி செயல்பட்டு நல்ல பெயரை பெறுகின்றனர். பலரும் நினைக்க மட்டும்தான் செய்கிறார்கள். இவர்களுக்காகவே ஹர்மலா (ரலி) என்பவர் கீழ்க்கண்டவற்றை கூறுகிறார்.
நபிகள் நாயகத்திடம் ஒருநாள் நான் பேசிக்கொண்டிருந்தேன். அப்போது அவரிடம், ''நான் எப்படி செயல்பட வேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள்'' என்று கேட்டேன். அதற்கு அவர், ''நன்மையின் பக்கம் செல். தீமையைவிட்டு விலகிக்கொள். ஓர் அவையில் இருந்து நீ வெளியேறினால், பிறர் உன்னை நல்லவிதத்தில் பேசும்படி வைத்துக்கொள். அதோடு விட்டுவிடாமல் உனக்குள் நல்ல பண்புகளை வளர்த்துக்கொள். உன்னைப்பற்றி தவறாக கூறும் விஷயங்களை நீ தவிர்த்துக்கொள்'' என அறிவுரை கூறினார்.
இன்று நோன்பு துறக்கும் நேரம்: மாலை 6:35 மணி
நாளை நோன்பு வைக்கும் நேரம்: அதிகாலை 4:48 மணி

