ADDED : மார் 17, 2024 06:44 PM

அப்துல்லாஹ்பின் அம்ரு பின் ஆஸ் என்பவரிடம் நபிகள் நாயகம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவர், ''அப்துல்லாஹ் நீங்கள் பகல் முழுவதும் நோன்பு நோற்பதாகவும், இரவு முழுவதும் நஃபில் தொழுகையில் ஈடுபடுவதாகவும் என்னிடம் சொன்னார்கள். இது உண்மையா'' எனக் கேட்டார்.
''ஆம். உண்மையே'' என்றார்.
அதற்கு அவர், ''அவ்வாறு செய்யாதீர். சில நாட்களில் நோன்பு வையுங்கள். சில நாட்களில் உண்ணவும், பருகவும் செய்யுங்கள். உறங்குங்கள். தஹஜ்ஜுத் தொழுகையை நிறைவேற்றுங்கள். ஏனெனில் உமது உடலுக்கும், கண்ணுக்கும், மனைவிக்கும், உன்னை சந்திப்போருக்கும் உம்மீது உரிமை உண்டு. இவர்களுக்கு நீங்கள் செய்ய வேண்டிய கடமைகளும் உண்டு. எனவே ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நோன்பு வையுங்கள். இது போதுமானது'' என்றார்.
இதற்கு காரணம் என்ன தெரியுமா... தொடர்ச்சியாக நோன்பு நோற்பதாலும் இரவு முழுக்க தொழுவதாலும் ஆரோக்கியம் கெடும். ஒவ்வொரு செயலிலும் சமநிலையை கடைப்பிடிப்பது நல்லது.
இன்று நோன்பு துறக்கும் நேரம்: மாலை 6:35 மணி
நாளை நோன்பு வைக்கும் நேரம்: அதிகாலை 4:52 மணி

