ஓ.பி.சி., 'கிரீமிலேயர்' ரூ.16 லட்சமாக உயர்த்த ராமதாஸ் கோரிக்கை
ஓ.பி.சி., 'கிரீமிலேயர்' ரூ.16 லட்சமாக உயர்த்த ராமதாஸ் கோரிக்கை
UPDATED : ஏப் 03, 2025 04:16 AM
ADDED : ஏப் 02, 2025 07:53 PM

சென்னை:'பார்லிமென்ட் கூட்டுக் குழு பரிந்துரைப்படி, ஓ.பி.சி., இட ஒதுக்கீட்டுக்கான கிரீமிலேயரை, 16 லட்சம் ரூபாயாக அதிகரிக்க வேண்டும்' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை:
மத்திய அரசின் கல்வி, வேலைவாய்ப்புகளில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரான ஓ.பி.சி.,க்கு, 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதில், பயனடைய ஆண்டு வருமான வரம்பு, தற்போது 8 லட்சம் ரூபாயாக உள்ளது. இதை கணிசமாக உயர்த்த வேண்டும் என்று, ஓ.பி.சி., வகுப்பினரின் நலனுக்கான பார்லிமென்ட் நிலைக்குழு பரிந்துரைத்துள்ளது.
'கிரீமிலேயர்' எனும் ஆண்டு வருமான வரம்பு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை உயர்த்தப்பட்டு வந்த நிலையில், பல்வேறு காரணங்களால், கடந்த எட்டு ஆண்டுகளாக உயர்த்தப்படவில்லை. கடந்த காலங்களில் கடைபிடிக்கப்பட்டு வந்த நடைமுறைகளின்படி, 2017க்குப் பின், 2026ல் மூன்றாவது முறையாக, கிரிமீலேயர் வரம்பு உயர்த்தப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால், இதுவரை ஒருமுறை கூட கிரீமிலேயர் வரம்பு உயர்த்தப்படவில்லை. இப்போது பார்லிமென்ட் நிலைக்குழு பரிந்துரையை ஏற்று, மாநில அரசுகள், ஓ.பி.சி., அமைப்புகளுடனும் பேச்சு நடத்தி, கிரீமிலேயர் வரம்பை 16 லட்சம் ரூபாயாக உயர்த்த, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

