ADDED : ஆக 02, 2025 02:44 AM
சென்னை:முதல்வர் ஸ்டாலினை, ஆழ்வார்பேட்டையில் உள்ள வீட்டில், நேற்று ராமதாஸ் சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்கு பின், அவர் அளித்த பேட்டி:
முதல்வரிடம் நலம் விசாரித்தேன். அவர், நன்றாக இருக்கிறார். டாக்டர்களிடம் விசாரித்தேன். அவர் விரைவில் குணமடைய, என் வாழ்த்துகளை தெரிவித்தேன்.
'உங்களுடன் நாங்களும் இருக்கிறோம்' என, முதல்வர் ஸ்டாலினிடம் நான் தொலைபேசியில் கூறியதாக, நீங்கள் கூறுகிறீர்கள். நான் தொலைபேசியில் பேசவில்லை.
முதல்வர் ஸ்டாலினுக்கு, உடல் நலத்தை விசாரிக்கதான் வந்தேன். உடல் நலம் விசாரித்ததற்கும், தேர்தல் கூட்டணிக்கும், எந்த சம்பந்தமும் இல்லை.
வரும் 17ம்தேதி பா.ம.க., பொதுக்குழுக் கூட்டம் நடக்கிறது. யார், யாருக்கு அழைப்பிதழ் கொடுக்க வேண்டும் என்பதை கட்சி தீர்மானிக்கும். உரியவர்களுக்கு அழைப்பிதழ் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

