ADDED : ஜூலை 03, 2025 12:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை:
தமிழக காவல் துறையினருக்கு இப்போது சட்ட அறிவும், மனிதநேயமும், பொதுமக்களை அணுகும் விதம் குறித்த புரிதலும் தேவைப்படுகிறது. அதற்கான பயிற்சி அவர்களுக்கு போதவில்லை.
இதே மனநிலையோடு, காவலர்கள் பணியை தொடர்கிற நிலை உருவானால், பொதுமக்களின் நிம்மதி கேள்விக்குரியதாகி விடும். ஒவ்வொரு முறையும், அஜித்குமார் போன்றவர்களின் கொடூர மரணங்களின் போது மட்டும் ஒன்று கூடி, விடிய விடிய பேசி கலைந்து போவது தீர்வாகாது.
முதல்கட்டமாக காவலர் பயிற்சிக்கான பாடநுாலில், காவல் துறைக்கு எதிரான உயர் நீதிமன்ற உத்தரவுகளை சேர்க்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.