sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ராமேஸ்வரத்தில் ஒரே நாளில் 411 மி.மீ., பதிவு இன்று 'ரெட் அலர்ட்'

/

ராமேஸ்வரத்தில் ஒரே நாளில் 411 மி.மீ., பதிவு இன்று 'ரெட் அலர்ட்'

ராமேஸ்வரத்தில் ஒரே நாளில் 411 மி.மீ., பதிவு இன்று 'ரெட் அலர்ட்'

ராமேஸ்வரத்தில் ஒரே நாளில் 411 மி.மீ., பதிவு இன்று 'ரெட் அலர்ட்'


ADDED : நவ 21, 2024 02:04 AM

Google News

ADDED : நவ 21, 2024 02:04 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று மாலை 4:00 மணிவரை இடைவிடாது மழை பெய்தது. ஒரேநாளில் மாவட்டம் முழுவதும் 1641.80 மி.மீ.,பதிவானது. அதிகபட்சமாக ராமேஸ்வரத்தில் 411 மி.மீ., பெய்தது.

மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. தாழ்வான பகுதியில் குளம் போல மழை நீர் தேங்கியது.

ராமநாதபுரம் அருகே பெருங்குளத்தில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் சிரமப்பட்டனர். நேற்று மாலை 4:00 மணி நிலவரப்படி பதிவான மழை அளவு (மி.மீ.,): ராமநாதபுரம் --75, மண்டபம் -261.40, ராமேஸ்வரம் -411, பாம்பன்-237, தங்கச்சிமடம்-322, பரமக்குடி- 25,திருவாடானை - 11.80, பள்ளமோர்குளம் - 45.20,ஆர்.எஸ்.மங்கலம் -10.40, முதுகுளத்துார் - 48.20, கமுதி-45.80,கடலாடி-71, வாலிநோக்கம் 65.60, என 1641.61 மி.மீ.,பதிவாகியுள்ளது.

மாவட்டத்தில் ஒரே நாளில் சராசரியாக 102.61மி.மீ., மழை பெய்துள்ளது. இன்றும் (நவ.,21) அதிகனமழைபெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் ராமநாதபுரத்திற்கு 'ரெட் அலர்ட்'எச்சரிக்கை விடுத்துள்ளது. அனைத்து பகுதிகளிலும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளுக்குகலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் உத்தரவிட்டுள்ளார்.

பாம்பனில் மீனவர் குடிசைகளுக்குள் கடல் நீர்


ராமேஸ்வரம், பாம்பன், தங்கச்சிமடம், மண்டபம் பகுதியில் கனமழை பெய்தது. இதனால் ராமேஸ்வரம் பஸ் ஸ்டாண்ட் அருகிலும், தங்கச்சிமடத்தில் மதுரை-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் மழைநீர் குளம்போல் தேங்கியது.

இதனால் ராமேஸ்வரம் கோயிலுக்கு வந்த பக்தர்கள், சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் ஊர்ந்தபடி சென்றன. மேலும் மண்டபம் எருமைதரவை, பாம்பன் தரவைத்தோப்பு, சின்னப்பாலம், ராமேஸ்வரம் புது ரோடு, இந்திரா நகர் பகுதியில் மழைநீர் வீடுகளை சூழ்ந்ததால் மக்கள் வெளியேற முடியாமல் தவித்தனர்.

நேற்று முன்தினம் இரவு பாம்பனில் கடல் கொந்தளித்து ராட்சத அலைகள் எழுந்ததால் பாம்பன் தெற்குவாடி கடலோரத்தில் உள்ள 20க்கும் மேற்பட்ட மீனவர்களின் குடிசை வீடுகளுக்குள் கடல்நீர் புகுந்தது. இதனால் மீனவர்கள் இரவில் துாங்க முடியாமல் தவித்தனர்.

ராமநாதபுரத்தில் சேதம்


மழை தொடர்ந்து பெய்தால் ராமேஸ்வரம் தீவுப் பகுதியில் 100க்கும் மேற்பட்ட வீடுகளை மழைநீர் சூழ்ந்துள்ளது.

ராமநாதபுரம் நகர், புறநகர் பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் குளம் போல தண்ணீர் தேங்கியது. ஆளில்லாத இரு பழைய ஓட்டு வீடுகள் சேதமடைந்தன. பள்ளி, கல்லுாரிகளுக்கு நேற்று விடுமுறை அளிக்கப்பட்டது. சந்தை வியாபாரிகள் பாதிக்கப்பட்டனர். குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் தேங்கியதால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கினர்.

மரம் சாய்ந்ததில்கார் நொறுங்கியது


-ராமநாதபுரத்தில் நேற்று மதியம் மகாத்மா காந்திநகர் பகுதியில் இருந்த 50 ஆண்டு பழமையான வேப்ப மரம் வேரோடு சாய்ந்தது. இதில்மரத்திற்கு கீழ் நின்ற கார் நொறுங்கியது. காரில் யாரும் இல்லை. 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் மரத்தை அகற்றினர். ராமநாதபுரத்தில் பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. இவற்றை அப்புறப்படுத்த வந்த தீயணைப்பு வீரர்களிடம் மரம் அறுக்கும் இயந்திரம் இல்லாததால் அரிவாளால் வெட்டினர். மணல் அள்ளும் இயந்திரம் வந்த பிறகே மரத்தை முழுமையாக அப்புறப்படுத்த முடிந்தது.

ராமேஸ்வரம், உத்தரகோசமங்கை கோயில்களில் வெள்ளம்

தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலை, கோயில் நான்கு ரதவீதியில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மக்கள் வீடுகளில் இருந்து வெளியேற முடியாமல் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.மழையால் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் மேல் தளத்தில் இருந்து மழைநீர் கோயிலுக்குள் புகுந்தது. அதிக மழை பெய்ததால் வாறுகாலில் செல்ல வழியின்றி மழைநீர் கோயில் 1 முதல் 3ம் பிரகாரம் வரை குளம்போல் தேங்கியது. பக்தர்கள் சிரமத்துடன் தரிசனம் செய்தனர். மழை நின்ற பின் மாலை கோயில் ஊழியர்கள் மோட்டார் மூலம் தண்ணீரை வெளியேற்றினர். மண்டபம் கடற்கரையில் நிறுத்தி இருந்த செய்யது அப்துல்காதர் என்பவரது விசைப்படகு சூறாவளியில் சிக்கி கரை ஒதுங்கியது.உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில்அபூர்வ மரகத நடராஜர் சிலை உள்ளது. இங்கு போதிய வடிகால் வசதியின்றி மழைநீர் தேங்குவது வாடிக்கையாகியுள்ளது. பலத்த மழை பெய்ததால் ரோட்டில் தேங்கிய தண்ணீர் கோயில் உள் பிரகாரங்களில் புகுந்தது. இதனால் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய சிரமப்பட்டனர்.



மேக வெடிப்பு என்றால் என்ன

பருவமழை காலங்களில், 20 முதல், 30 சதுர கி.மீ., வரையிலான பரப்பளவில், ஒரு மணி நேரத்தில், 10 செ.மீ.,க்கு மேல் மழை பெய்தால், அது மேக வெடிப்பாக கருதப்படுகிறது. அதிக நீருடன், அடர்த்தியான மேக கூட்டங்கள், நிலத்தில் இருந்து மேல் நோக்கி செல்லும், வெப்பக்காற்றின் அழுத்தம் காரணமாக, அப்பகுதியில் அதிக மழையை கொட்டும். இயல்பான சமயத்தில் துளிகளாக வரும் மழை, மேக வெடிப்பின் போது அருவி போன்று கொட்டும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.








      Dinamalar
      Follow us