ADDED : செப் 28, 2025 06:25 AM
சென்னை: தீபாவளியை முன்னிட்டு, வரும் அக்டோபரில், முதியோரின் வீடுகளுக்கு சென்று ரேஷன் பொருட்கள் வழங்கும் பணியை, வரும், 5, 6ம் தேதிகளில் மேற்கொள்ளுமாறு, மண்டல இணை பதிவாளர்களுக்கு கூட்டுறவு துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில், 70 வயதுக்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளி ரேஷன் கார்டுதாரர்களின் வீடுகளுக்கு, ரேஷன் பொருட்கள் வினியோகம் செய்யப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ், 21.70 லட்சம் பயனாளிகளின் வீடுகளுக்கு, மாதம் தோறும் இரண்டாவது சனி மற்றும் ஞாயிற்று க் கிழமை களில், வாகனங்களில் பொருட்களை எடுத்து சென்று, ரேஷன் ஊழியர்கள் வினியோகம் செய்கின்றனர்.
அடுத்த மாதம், 20ம் தேதி தீபாவளி வருகிறது.
எனவே, முன்கூட்டியே கார்டுதாரர்களுக்கு பொருட் களை வழங்கும் வகையில், அக்டோபர், 5, 6ம் தேதிகளில், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளி களின் வீடுகளுக்கு சென்று, ரேஷன் பொருட்களை வினியோகம் செய்ய, இணை பதிவாளர்களுக்கு, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் நந்தகுமார் உத்தரவிட்டுள்ளார்.