ADDED : பிப் 01, 2024 10:57 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தென்காசி:தென்காசி மாவட்டத்தில் கிளாங்காடு ஜமதக்னீஸ் வரர் கோவில், இலத்துார் மதுநாத சுவாமி கோவில், புளியரை கிருஷ்ணசாமி கோவிலுக்கு சொந்தமான நிலங்களை சிலர் ஆக்கிரமித்து வைத்திருந்தனர்.
அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளையும் செலுத்தாமல் இருந்தனர். அவர்களிடமிருந்து 4 ஏக்கர் நிலம் நேற்று அளவீடு செய்து மீட்கப்பட்டது.
திருக்கோவில் நிர்வாக அறங்காவலர் குழு தலைவர் பிரபாஜி ராமகிருஷ்ணன் தலைமையில் நிலங்களை மீட்கும் பணிகள் நடந்தன. மீட்கப்பட்ட நிலங்களின் மதிப்பு, 8 கோடி ரூபாயாகும்.

