அரசு பணிகளை கண்காணிக்கும் மாவட்ட குழு மாற்றியமைப்பு
அரசு பணிகளை கண்காணிக்கும் மாவட்ட குழு மாற்றியமைப்பு
ADDED : செப் 24, 2024 10:45 PM
சென்னை:அனைத்து மாவட்டங்களிலும் அரசின் வளர்ச்சி பணிகளை செயல்படுத்த, அவற்றை கண்காணிக்க, மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் கண்காணிப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசு திட்டங்கள் எவ்வாறு செயல்படுத்தப்படுகின்றன என்பதை ஆய்வு செய்து, அரசுக்கு அறிக்கை அளிக்கவும், திட்டங்கள் முறையாக செயல்படுத்தப்படுவதை கண்காணிக்கவும், மாவட்டத்திற்கு ஒருவர் வீதம், கண்காணிப்பு அலுவலர்களாக மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் நியமிக்கப்படுவது, 2019 முதல் வழக்கமாக உள்ளது.
தற்போது, ஏற்கனவே இருந்த கண்காணிப்பு அலுவலர்கள் மாற்றப்பட்டு, புதிதாக 38 மாவட்டங்களுக்கும் மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் கண்காணிப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர். இவர்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டத்திற்கு மாதம் ஒரு முறை செல்ல வேண்டும்.
தமிழக அரசின் சிறப்பு திட்டங்கள் குறித்தும், வளர்ச்சிப் பணிகளின் நிலை குறித்தும் ஆய்வுசெய்து, சிறப்பு திட்ட செயலாக்க துறைக்கு, அறிக்கை அளிக்க வேண்டும் என, தலைமைச் செயலர் முருகானந்தம் உத்தரவிட்டு உள்ளார்.