எஸ்.சி., -- எஸ்.டி., பணியாளர் சங்கத்துக்கு பதிவுத்துறை அழைப்பு
எஸ்.சி., -- எஸ்.டி., பணியாளர் சங்கத்துக்கு பதிவுத்துறை அழைப்பு
ADDED : ஆக 26, 2025 04:03 AM
சென்னை : தேசிய எஸ்.சி., - எஸ்.டி., ஆணையத்தின் நோட்டீஸை அடுத்து, தமிழக பதிவுத்துறை, எஸ்.சி., - எஸ்.டி., பணியாளர் சங்கம், குறை கேட்பு கூட்டத்தில் பங்கேற்க, பதிவுத்துறை அழைப்பு விடுத்துள்ளது.
பதிவுத்துறையில் பணியாளர்கள் குறை கேட்பு கூட்டம், வரும் 28 ம் தேதி நடக்க உள்ளது. இதில் பங்கேற்க, குறிப்பிட்ட நான்கு சங்கங்களுக்கு மட்டும் அழைப்பு அனுப்பப்பட்டது.
தங்கள் சங்கத்தை அழைக்காதது குறித்து, தமிழக பதிவுத்துறை எஸ்.சி., - எஸ்.டி., சங்கம் சார்பில், தேசிய எஸ்.சி., - எஸ்.டி., ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இது குறித்து, 15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்கும்படி, பதிவுத்துறை ஐ.ஜி.,க்கு, ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.
இதையடுத்து, பதிவுத்துறை எஸ்.சி., - எஸ்.டி., பணியாளர்கள் சங்கம், பதிவுத்துறை பிற்படுத்தப்பட்டோர் நல சங்கம், பதிவுத்துறை எம்.பி.சி., மற்றும் டி.என்.டி., பணியாளர்கள் சங்கம், பதிவுத்துறை அலுவலர் சங்கம் ஆகியவை, குறை கேட்பு கூட்டத்தில் பங்கேற்க, அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பதிவுத்துறை தலைவர் இதற்கான கடிதங்களை அனுப்பி உள்ளார்.