செல்வப்பெருந்தகையை காங்.,கில் இருந்து நீக்குங்க: ராகுலுக்கு பகுஜன் சமாஜ் கடிதம்
செல்வப்பெருந்தகையை காங்.,கில் இருந்து நீக்குங்க: ராகுலுக்கு பகுஜன் சமாஜ் கடிதம்
ADDED : செப் 19, 2024 07:56 PM

சென்னை: '' ஆம்ஸ்டிராங் கொலை வழக்கில் தொடர்பு உள்ளதால், தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து செல்வப்பெருந்தகையை நீக்க வேண்டும்'', என எதிர்க்கட்சி தலைவர் ராகுலுக்கு பகுஜன் சமாஜ் கட்சி கடிதம் எழுதி உள்ளது.
இது தொடர்பாக அக்கட்சியின் மாநில பொதுச்செயலாளர் ஜெய்சங்கர் எழுதிய கடிதத்தில் கூறியுள்ளதாவது: பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்டிராங் கொலை வழக்கில் தொடர்பு உள்ளதால் தமிழக காங்., தலைவர் பதவியில் இருந்து செல்வப்பெருந்தகையை நீக்க வேண்டும். புதிய பாரதம், புதிய தமிழகம், வி.சி.க., பி.எஸ்.பி., கட்சியில் இருந்த பிறகு தான் அவர் காங்கிரசில் இணைந்தார். இக்கொலை வழக்கில் ஏன் கைது செய்யவில்லை என பலரும் கேள்வி எழுப்புகின்றனர். காங்கிரசில் உள்ளதால் தான் கைதாகவில்லை எனவும் கூறுகின்றனர். அவரை கட்சியில் இருந்து நீக்கினால் தான், மக்கள் மத்தியில் காங்கிரஸ் நிலைத்து இருக்கும். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.