தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ மின் அடுப்புக்கான ஜி.எஸ்.டி.,யை குறைக்க கோரிக்கை

 மின் அடுப்புக்கான ஜி.எஸ்.டி.,யை குறைக்க கோரிக்கை

 மின் அடுப்புக்கான ஜி.எஸ்.டி.,யை குறைக்க கோரிக்கை


ADDED : மே 28, 2026 11:47 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 28, 2026 11:47 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: 'வணிக காஸ் தட்டுப்பாடு காரணமாக, ஹோட்டல்களில் மின் அடுப்பு பயன்பாடு அதிகரித்து வருகிறது. இந்த அடுப்புக்கான ஜி.எஸ்.டி., 18 சதவீதமாக உள்ளது. இதை, 5 சதவீதமாக குறைக்க, மத்திய அரசை வலியுறுத்துங்கள்' என, முதல்வர் விஜயிடம், ஹோட்டல்கள் சங்கத்தினர் வலியுறுத்தி உள்ளனர்.

இதுகுறித்து, சென்னை ஹோட்டல்கள் சங்கத் தலைவர் ரவி கூறியதாவது:

தமிழகத்தில் சிறியது, நடுத்தரம், பெரியது என, ஒரு லட்சம் ஹோட்டல்கள் உள்ளன.

இவற்றில், 10 லட்சம் பேர் வேலை செய்கின்றனர். பல ஹோட்டல்கள், காஸ் சிலிண்டர் பிரச்னையால், மின் அடுப்புக்கு மாறியுள்ளன.

மின் அடுப்புக்கு, ஜி.எஸ்.டி., 18 சதவீதமாக உள்ளது. இதை, 5 சதவீதமாக குறைக்க, மத்திய அரசை வலியுறுத்துவதுடன், சட்டப்படி அனுமதிக்கப்பட்ட வணிக நேரங்களில், போலீசார் தலையீடு செய்யக்கூடாது என, தெளிவாக உத்தரவு வழங்க வேண்டும்.

இவை உட்பட பல்வேறு கோரிக்கைகளை, முதல்வர் விஜயை சந்தித்து தெரிவித்துள்ளோம். ஹோட்டல் கட்டட வாடகைக்கு, ஜி.எஸ்.டி., 18 சதவீதம் விதிக்கப்படுகிறது. இதையும் மத்திய அரசு குறைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us