ADDED : ஏப் 28, 2025 05:37 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை : அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் அளித்த பேட்டி: கூட்டணி தொடர்பாக, வி.சி., தலைவர் திருமாவளவன் கருத்து தெளிவற்ற நிலையில் உள்ளது.
சிறிய கட்சியாக இருந்தாலும், அ.தி.மு.க., கூட்டணியில் மரியாதை கொடுப்போம். ஆனால், தி.மு.க., கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு, தி.மு.க., உரிய மரியாதை கொடுப்பதில்லை.
அதனால், அந்த கூட்டணியில் இருக்கும் கட்சிகள், கசப்பான மன நிலையில் உள்ளன. அதன் வெளிப்பாடுதான் திருமாவளவனின் மாறுபட்ட கருத்துக்கள். இவ்வாறு அவர் கூறினார்.

