ADDED : மே 04, 2025 12:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை:தமிழகத்தில் கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தின் கீழ், 54 வகையான கட்டுமான பணிகளில், லட்சக்கணக்கான ஊழியர்கள் ஈடுபடுகின்றனர்.
இந்த ஊழியர்கள் அனைவரும், ஒரே இடத்தில் கூடும் வகையில், கட்டுமான தொழிலாளர்களுக்கு ஓய்வறை கட்டும் நோக்கில், அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும், மாநகராட்சி, நகராட்சிகளால், அடிப்படை வசதிகளுடன் கட்டிக்கொடுக்க அரசு திட்டமிட்டுள்ளது. இங்கு, குழந்தைகளுக்கு பாலுாட்டும் அறையும் அமைய உள்ளது.
தொழிலாளர் நலத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
கட்டுமான தொழிலாளர் நல வாரிய நிதியில், தலா, 40 லட்சம் ரூபாய் செலவில், ஓய்வறை கட்ட முதற்கட்டமாக, 20.50 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த அறையை, மாநகராட்சி, நகராட்சிகளால் கட்ட முடிவு செய்துள்ளோம். இடம் தேர்வு செய்யும் பணி நடக்கிறது.
இவ்வாறு கூறினார்.

