ADDED : ஜன 03, 2026 02:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: தமிழக அரசு, மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ், 1.30 கோடி பேருக்கு மாதந்தோறும் 1,000 ரூபாயை வங்கி கணக்கில் செலுத்தி வருகிறது. ஏற்கனவே விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டவர்களில், தகுதியானவர்களை மீண்டும் சேர்க்க திட்டமிடப்பட்டு உள்ளது.
இதற்காக குறைதீர்ப்பு விண்ணப்ப படிவம், kmut.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. அரசு உயர் அதிகாரிகள், தேசிய வங்கிகளின் அதிகாரிகள் மனைவி உட்பட பலருக்கும், உரிமைத்தொகை வழங்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து புகார் அளிக்க, இணையதளத்தில் வசதி செய்யப்பட்டு இருந்தது. அதில் புகார்கள் குவிந்தன. இதனால், சட்டசபை தேர்தல் நேரத்தில் பிரச்னை ஏற்படாமல் இருக்க, பயனாளிகள் குறித்து புகார் அளிக்கும் வசதி, இணையதளத்தில் இருந்து நீக்கப்பட்டு உள்ளது.

