ADDED : அக் 28, 2025 05:24 AM

பருவமழை பெய்வதால், அணைகள் நிரம்பி உபரி நீர், நதிகளில் வெளியேற்றப்படுகிறது. அது, கடலில் வீணாக கலக்கிறது. நதிகளில் முறையான புனரமைப்பு இருந்தால், கால்வாய்கள் வாயிலாக, நீர்ப்பாசனப் பகுதிகளில் முறையாக சேமிக்கப்படும்.
'நீர்வள ஆதாரங்கள் பாதுகாத்தல் மற்றும் நதிகள் சீரமைப்பு கழகம்' என்ற அமைப்பை தமிழக அரசு உருவாக்கி, சென்னையில் கூவம், அடையாறு நதிகளை புனரமைக்கிறது. இதற்கு மத்திய அரசு உதவி செய்து வருகிறது.
இந்த அமைப்பை வைத்து, சென்னையை தாண்டி தமிழகத்தில் அனைத்து நதிகளையும் புனரமைக்கும் பணிகளை மேற்கொள்ள வேண்டும். நதிகளை புனரமைக்கும்போது, நவீனமயமாக்கல் முறையில், துார்வாரும் பணிகள் மேற்கொள்ள வேண்டும் வறட்சி பகுதிகளுக்கு, நதிநீரை எடுத்து செல்ல, கால்வாய்களை நதிகளுடன் இணைக்கும் பணியை மேற்கொள்ள வேண்டும். மத்திய, மாநில அரசுகள் முழு முனைப்புடன் செயல்பட வேண்டும்.
- ராமதாஸ்
நிறுவனர், பா.ம.க.,

