UPDATED : நவ 04, 2026 12:00 AM
ADDED : நவ 03, 2026 11:00 PM
முதல்வர் விஜயின் புதுக்கோட்டை பயணம், பாமா விஜயம் என்ற திரைப்படத்தில் வரும், ‘வரவு எட்டணா, செலவு பத்தணா என்ற பாடலை நினைவூட்டுகிறது. சென்னையில் இருந்து, வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக, விழாவை நடத்தி இருக்கலாம். தமிழகம், 13 லட்சம் கோடி ரூபாய் கடனில் உள்ளபோது, தனி விமானம், ரோடு ஷோ, இரும்பு தடுப்புகள் என ஆடம்பர செலவு தேவையில்லை.
பிரதமர், முதல்வர், சினிமா பிரபலங்கள் ஆகியோர், ‘ரோடு ஷோ’ நடத்துவதால், பல மணி நேரம் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டு, மக்கள் தவிக்கின்றனர். எனவே, நாடு முழுதும், ‘ரோடு ஷோ’க்களை தடை செய்ய வேண்டும். ‘கள்’ மீதான தடையை நீக்குமாறு, நீண்ட காலமாக விவசாயிகள் போராடி வருகின்றனர். அதை வலியுறுத்தும் விதமாக, வரும் ஜனவரி 21ம் தேதி, தமிழகம் முழுதும் ‘கள்’ இறக்கி, சந்தைப்படுத்தி, விற்பனை செய்யப்படும்.
– நல்லசாமி
ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாடு கள் இயக்கம்
