ஆட்சி அதிகாரத்தில் பங்கு : அன்புமணியின் சொந்த கருத்து என்கிறார் ராமதாஸ்
ஆட்சி அதிகாரத்தில் பங்கு : அன்புமணியின் சொந்த கருத்து என்கிறார் ராமதாஸ்
ADDED : ஜூலை 17, 2025 11:07 AM

திண்டிவனம்: ''ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்று அன்புமணி கூறியிருப்பது அவரது சொந்த கருத்து'' என, பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில், பா.ம.க.,வின் 37ம் ஆண்டு துவக்க விழா நேற்று நடந்தது. அதையொட்டி, காலை நடந்த நிகழ்ச்சியில் அம்பேத்கர், காரல்மார்க்ஸ், பெரியார் சிலைக்கு பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினார்.
அங்குள்ள கொடிக்கம்பத்தில், கட்சி கொடியை ஏற்றி வைத்து, பொதுமக்கள் மற்றும் கட்சி தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார்.
பேராசிரியர் தீரன், பொறியாளர் முகுந்தன், தலைமை நிலைய செயலாளர் அன்பழகன், மாவட்ட செயலாளர் ஜெயராஜ், செயற்குழு உறுப்பினர் சுப்பராயலு, மாவட்ட தலைவர் பாவாடைராயன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அப்போது ராமதாசிடம், ' தமிழகத்தில் வரும் சட்டசபை தேர்தலில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்று அன்புமணி கூறியிருப்பது குறித்து நிருபர்கள் கேட்டதற்கு, 'அது அவரது சொந்த கருத்து' என்று பதில் அளித்தார்.

