தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/வேலூர்/ரூ.15 லட்சம் பட்டாசு பறிமுதல் திருமண மண்டபத்திற்கு சீல்

ரூ.15 லட்சம் பட்டாசு பறிமுதல் திருமண மண்டபத்திற்கு சீல்

ரூ.15 லட்சம் பட்டாசு பறிமுதல் திருமண மண்டபத்திற்கு சீல்

1


UPDATED : நவ 04, 2026 01:59 PM

ADDED : நவ 04, 2026 01:57 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 04, 2026 01:59 PM ADDED : நவ 04, 2026 01:57 PM

1


1
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

குடியாத்தம்: குடியாத்தத்தில், அனுமயின்றி பதுக்கி வைத்திருந்த, 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான பட்டாசு பெட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

வேலுார் மாவட்டம், குடியாத்தம் காமாட்சியம்மன் பேட்டை பகுதியில் தனியார் திருமண மண்டபத்தில் சட்ட விரோதமாக பட்டாசுகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தாக அதிகாரிகளுக்கு தகவல் வந்தது.

குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் செந்தில்குமார் மற்றும் தாசில்தார் பிரியா, குடியாத்தம் டி.எஸ்.பி., சுரேஷ் ஆகியோர் தலைமையிலான வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார் தனியார் திருமண மண்டபத்தில் நேற்று சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, மண்டபத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான பட்டாசு பெட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில் பட்டாசு கடை நடத்தி வரும் மேகநாதன் என்பவர் பட்டாசுகளை தனியார் திருமண மண்டபத்தில் விற்பனைக்காக பதுக்கி வைத்தது தெரியவந்தது. பட்டாசுகளை பறிமுதல் செய்த வருவாய்த் துறையினர் தனியார் மண்டபத்திற்கு சீல் வைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us