பதக்கம் வென்ற வீரர்களுக்கு ரூ.21.5 கோடி ஊக்கத்தொகை
பதக்கம் வென்ற வீரர்களுக்கு ரூ.21.5 கோடி ஊக்கத்தொகை
ADDED : செப் 27, 2025 02:06 AM

சென்னை:தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், சர்வதேச, ஆசிய மற்றும் தேசிய போட்டிகளில் பதக்கம் வென்ற வீரர் - வீராங்கனையருக்கு உயரிய ஊக்கத்தொகை வழங்கும் விழா, சென்னையில் நேற்று நடந்தது.
பதக்கம் வென்ற 818 வீரர் - வீராங்கனையருக்கு உயரிய ஊக்கத்தொகையாக, 21.5 கோடி ரூபாயை, துணை முதல்வர் உதயநிதி வழங்கினார். மேலும், ஆணையத்தில் பணியின்போது உயிரிழந்த நான்கு பேரின் வாரிசுதாரர்களுக்கு, பணி நியமன சான்றிதழ் களையும் வழங்கினார்.
துணை முதல்வர் உதயநிதி பேசியதாவது:
தி.மு.க., அரசு அமைந்த இந்த நான்கரை ஆண்டுகளில் மட்டும், 4,510 வீரர்களுக்கு, 150 கோடி ரூபாய் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது. .
மேலும், இந்த அரசு மட்டுமே, விளையாட்டு வீரர்கள் போட்டிக்கு செல்வதற்கு முன், தேவையான ஊக்கத்தொகையை முன்கூட்டியே வழங்குகிறது. வெற்றி பெறும் வீரர்களுக்கு அரசு வேலை வழங்கும் வகையிலும் செயல்படுகிறது.
தமிழக வரலாற்றில் முதன்முறையாக, 100க்கும் அதிகமான வீரர் களுக்கு அரசு வேலை வழங்கப்பட்டிருக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.