ADDED : மார் 01, 2024 12:02 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலையம் திறக்கப்பட்டுள்ளதால், மாநகர பஸ்களின் தேவை அதிகரித்து வருகிறது.
வடசென்னை பகுதிகளுக்கு செல்ல இரண்டு பஸ்கள் மாற வேண்டியுள்ளது. எனவே, சிரமம் இன்றி செல்ல வசதி வேண்டுமென பயணியர் கோரிக்கை விடுத்தனர்.
விரைவு பஸ்களில் டிக்கெட் முன்பதிவின்போது, கூடுதலாக 40 ரூபாய் செலுத்தி, கிளாம்பாக்கத்தில் இருந்து சென்னையின் பிற பகுதிகளுக்கு மாநகர பஸ்களில் பயணிக்கும் வசதியை, போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் நேற்று தலைமை செயலகத்தில் துவக்கி வைத்தார்.
கிளாம்பாக்கத்தில் இறங்கிய பின், அடுத்த நான்கு மணி நேரம் வரை, இந்த டிக்கெட்டை பயன்படுத்தி, இரண்டு, மூன்று மாநகர பஸ்களில் பயணம் செய்யலாம். இந்த புதிய திட்டம், இன்று அமலுக்கு வருகிறது.

