உயிரிழந்த துாய்மை பணியாளர்களுக்கு ரூ. 40 லட்சம் ரூபாய் இழப்பீடு: அண்ணாமலை
உயிரிழந்த துாய்மை பணியாளர்களுக்கு ரூ. 40 லட்சம் ரூபாய் இழப்பீடு: அண்ணாமலை
ADDED : செப் 23, 2025 11:45 PM
'ரோபோக்களை பயன்படுத்தலாம்'
தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை அறிக்கை:
திருச்சி மாவட்டம், திருவெறும்பூரில், இரு துாய்மைப் பணியாளர்கள், விஷவாயு தாக்கி இறந்தது அதிர்ச்சி அளிக்கிறது.
துாய்மைப் பணியாளர்களுக்கு, போதிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும் என்ற எண்ணம், தி.மு.க., அரசுக்கு வருவதற்கு, இன்னும் எத்தனை உயிர்கள் பறிபோக வேண்டும். சென்னை ஐ.ஐ.டி., மாணவர்கள், துாய்மைப் பணியை மேற்கொள்ள, 'ஹோமோசெப், சிப்பாய்' ஆகிய இரு ரோபோக்களை கண்டுபிடித்துள்ளனர். இவற்றை பயன்பாட்டில் கொண்டு வர, தி.மு.க., அரசு இத்தனை ஆண்டுகளாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தன து தந்தை சிலை வைக்க, மக்கள் வரிப் பணத்தை செலவு செய்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய, முதல்வர் ஸ்டாலினுக்கு நேரமும், நிதியும் இருக்கிறது. துாய்மைப் பணியாளர்களுக்கு, தேவையான கருவிகள் வாங்க, நிதி இல்லையா.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.