ADDED : ஆக 15, 2025 12:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:விபத்து உள்ளிட்ட காரணங்களால் இறந்த ஐந்து அரசு ஊழியர்களின் குடும்பங்களுக்கு விபத்து மற்றும் ஆயுள் காப்பீட்டு தொகை, திருமண உதவித்தொகை, உயர் கல்வி உதவித் தொகை என, 4.38 கோடி ரூபாய்க்கான காசோலைகளை, முதல்வர் ஸ்டாலின் நேற்று வழங்கினார்.
தலைமை செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதி, நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமை செயலர் முருகானந்தம், நிதித்துறை செயலர் உதய சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.