தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/காலி மதுபாட்டிலுக்கு ரூ.5 ‘குடி’ மகன்கள் அதிர்ச்சி

காலி மதுபாட்டிலுக்கு ரூ.5 ‘குடி’ மகன்கள் அதிர்ச்சி

காலி மதுபாட்டிலுக்கு ரூ.5 ‘குடி’ மகன்கள் அதிர்ச்சி


UPDATED : நவ 06, 2026 07:44 PM

ADDED : நவ 06, 2026 07:34 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 06, 2026 07:44 PM ADDED : நவ 06, 2026 07:34 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தஞ்சாவூர்: தமிழகத்தில், டாஸ்மாகில் மதுபாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வாங்குவதாக, குற்றச்சாட்டு எழுந்தது. த.வெ.க., தலைவரும், முதல்வருமான விஜய் தேர்தல் நேரத்தில் பிரசாரங்களில் பேசினார். த.வெ.க., ஆட்சி அமைந்த பிறகு, மதுபான விற்பனையில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன.

அதன்படி, கடந்த நவ., 1 முதல், மதுபாட்டில் எம்.ஆர்.பி.,யுடன் இணைத்து, 10 ரூபாய் சுற்றுச்சூழல் மற்றும் சமூக நல வரி என்ற பெயரில் விலையை அரசு உயர்த்தியது. மேலும், காலி மதுபாட்டிலாக கொடுத்து, அந்த 10 ரூபாயை திரும்ப பெற்றுக்கொள்ள அறிவுறுத்தியது.

அத்துடன், காலி பாட்டில்களை கையாள செலவு தொகையை ஏற்கனவே, டாஸ்மாக் பணியாளர்கள் வழங்கி வந்த நிலையில், சென்னை மாநகராட்சி பகுதிக்கு 2,000 ரூபாய், மற்ற மாநகராட்சி பகுதிகளுக்கு 1,800 ரூபாய்

நகராட்சி மற்றும் பேரூராட்சிக்கு 1,600 ரூபாய்,ஊராட்சி பகுதிகளுக்கு 1,500 ரூபாய் என நிர்ணயம் செய்து, கடை மேற்பார்வையாளரின் வங்கி கணக்குக்கு மாதம் தோறும் முன்பணமாக கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால், தற்போது காலிமது பாட்டில்களை திரும்ப வழங்கும் மதுபிரியர்களிடம், ஐந்து ரூபாய் மட்டுமே ஊழியர்கள் திரும்பி தருவதாகவும், மீதமுள்ள ஐந்து ரூபாய் காலி மதுபாட்டில்களை சேகரிக்கும் நபர்களுக்கான சம்பளம் எனவும் கூறி வருகின்றனர். இதனால், டாஸ்மாக் பணியாளர்களுக்கும், மதுப்பிரியர்களுக்கும் இடையே அவ்வப்போது வாக்குவாதம் ஏற்பட்டு வருகிறது.

தஞ்சாவூர் மாவட்டம் சாலியமங்கலத்தில் 8040 அரசு மதுபான கடையில், காலி மதுபாட்டிலுக்கு ஐந்து ரூபாய் ஊழியாளரால் வழங்கப்பட்ட நிலையில், ஊழியர்களுக்கும் - மதுபிரியர்களுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு, கடையை பூட்டிவிட்டு புறப்பட்டு ஊழியர் சென்ற வீடியோ பரவி வருகிறது. இதை போல, மாவட்டத்தில் பல்வேறு மதுபான கடைகளில் நிகழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us