உள்ளடக்கத்திற்கு செல்ல
அண்ணாமலை பதிவின் பின்னால் ஆர்.எஸ்.எஸ்., இருக்கிறது
அண்ணாமலை பதிவின் பின்னால் ஆர்.எஸ்.எஸ்., இருக்கிறது
UPDATED : அக் 22, 2026 09:23 PM
ADDED : அக் 22, 2026 09:18 PM
அ நிறம் | அளவு
கரப்பான் பூச்சி கட்சிக்கு ஆதரவாக, ‘வீ த லீடர்ஸ்’ தலைவர் அண்ணாமலை பதிவிட்டதற்கு பின்னால், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு இருக்கிறது. முகமூடிகளை மாற்றுவது, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் வழக்கம்; அதை இப்போது அண்ணாமலை பின்பற்றுகிறார். நல்லவர் போல அண்ணாமலை நடிக்கலாம். அவரது நாடகத்தை கண்டு நாங்கள் ஏமாற போவதில்லை.
ஆர்.எஸ்.எஸ்., மரபணு அவரிடம் இருக்கிறது. இந்த போலிகளை நம்பி ஏமாற மாட்டோம். அண்ணாமலையின் பதிவில், 'திரு.மோடி அவர்கள்' என, மரியாதையோடு தான் ஆரம்பிக்கிறார்.
நடிகர் தனுஷ் உட்பட எல்லோரும் அரசியல் கட்சியை தொடங்கலாம். அண்ணாமலையும் கட்சியை தொடங்கலாம். ஆனால், மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டுமே.
– மாணிக்கம் தாகூர்,
தமிழக தலைவர், காங்.,
